முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 சிறுவர்கள் பிடிபட்டனர்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 - தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு:- சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு செல் பேசி மூலம் சிட்டி முழுவதும் பாம் வைக்கப்போவதாக கூறி தொடர்பை துண்டித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அலுவலில் இருந்த பெண் காவலர் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர், காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யூசுப் என்பவரை 27-7-2011-ம் தேதி கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் கடந்த 14-7-2011-ம் தேதி சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்த நபரான பெங்களூரை சேர்ந்த ஹரிஷா என்பவரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 22-7-2011-ம் தேதி கைது செய்து 12-வது சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலமாக காவலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நபர்கள் இளம் சிறுவர்கள் ஆவார்கள். எனவே யாராவது குறும்புத்தனமாகவோ வேறு காரணங்களுக்காகவோ இம்மாதிரியான மிரட்டல் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பொறுப்பில் உள்ள சிறுவர்களை உரிய பொறுப்புடன் கண்காணிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்