முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை,29 - புதிய குடும்ப அட்டை கேரும் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுதார்களுக்கு 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று உணவுதுறை அமைச்சர் புத்திசந்திரன் அறிவித்துள்ளார்.

நேற்று சென்னை கோட்டையில் நடைபெற்ற பொதுவிநியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் உணவுதுறை அமைச்சர் புத்திசந்திரன் கலந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு கீழ் கண்ட அறிவுரைகள் வழங்கினார்.

 இது குறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் இலவச அரிசி உரிய முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டியது அலுவலர்களின் தலையாய கடமையாகும். நியாய விலை அங்காடிகளில் உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படவேண்டும். போலி பட்டியல் போட்டு அரிசி கடத்தும் அங்காடிப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோகத் திட்ட அரிசி பதுக்கல், கடத்தலில் ஈடுபடுவோர் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள்.  வட்ட வழங்கல் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்கல் மீது முறையான விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். தகுதியற்ற மற்றும் இல்லாத நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், குடும்ப அட்டை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டைகளில் மாற்றம் கோரி வரும் பொது மக்களுக்கு அவற்றை விரைந்து செய்து கொடுக்க வேண்டும். போலி குடும்ப அட்டைகள் சுற்றில் உள்ளன. அலுவலர்கள் அவற்றை   கண்டுப்பிடித்து உடன் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஏழை மக்களுக்காக இலவசமாக வழங்கும் பொது விநியோகத்திட்ட அரிசியை முறைகேடாக வாங்கி பயன்படுத்தும் சிறு ஓட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்