முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீதக்காதி விளையாட்டு: கிரசண்ட் காஜாமியான் அணிகள் ஆதிக்கம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 29​- வண்டலூரில் உள்ள கிரசண்ட் பள்ளி நடத்தும் சீதக்காதி விளையாட்டு போட்டியில் கிரசண்ட் மற்றும் திருச்சியைச் சேர்ந்த காஜாமியான் அணிகள் இரட்டை வெற்றிகள் கண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வண்டலூரில் உள்ள கிரசண்ட் பள்ளி சார்பில் கடந்த பல ஆண்டுகளாக சீதக்காதி விளையாட்டு போட்டி என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவை கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் சூப்பிரண்டு அஷ்ரப் அகமது சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவங்கி வைத்தார். துவக்கவிழாவில் பொதுமேலாளர் வி.என்.ஏ.ஜலால், இயக்குனர் தாவூத்ஷா, சீனியர் முதல்வர் யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.

கூடைப்பந்து விளையாட்டில் கிரசண்ட் அணி 65​க்கு 45 என்ற புள்ளிகளில் டான்போஸ்கோ(பெரம்nullர்) பள்ளியையும், கமலாசுப்பிரமணியன் அணி(தஞ்சாவூர்) 55க்கு14 என்ற புள்ளிகளில் செயின்ட் ஜான்ஸ் சர்வதேச பள்ளி(பழஞ்சூர்) அணியையும், ஷெர்வூட் பள்ளி(சேத்துப்பட்டு) 67க்கு56 என்ற புள்ளிகளில் வேலம்மாள் அணியையும், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி(ராயபுரம்) ஏ.எம்.எம்.பள்ளியையும் தோற்கடித்தது.

வாலிபால் விளையாட்டில் டான்போஸ்கோ(பெரம்nullர்) 25க்கு18, 25க்கு21 என்ற புள்ளிகளில் பச்சையப்பன் பள்ளியையும், கிரசண்ட் பள்ளி 25க்கு15, 25க்கு18 என்ற புள்ளிகளில் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும், செயின்ட் சேவியர்ஸ்(பாளையம்கோட்டை) அணி 25க்கு7, 25க்கு7 என்ற புள்ளிகளில் செயின்ட் ஜான்ஸ் சர்வதேச பள்ளியையும், காஜாமியான் பள்ளி(திருச்சி) 26க்கு24, 25க்கு21 என்ற புள்ளிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி(திட்டச்சேரி)யையும் தோற்கடித்தது.

கால்பந்து விளையாட்டில் காஜாமியான்(திருச்சி) பள்ளி 2க்கு0 என்ற கோலில் வேலம்மாள் சர்வதேச பள்ளியையும், என்.எல்.சி.(நெய்வேலி) பள்ளி 5ககு4 என்ற கோல்களில் வெஸ்லி(ராயப்பேட்டை) அணியையும் தோற்கடித்தது.

இன்று இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மாநில கால்பந்து சங்க தலைவர் சீனிமுகமது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்