முக்கிய செய்திகள்

அம்புலி பட கதாநாயகன் நடிகர் அஜய் தற்கொலை

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 -  திரைக்கு வர இருக்கும் `அம்புலி'   தமிழ்திரைப்படக் கதாநாயகன் நடிகர் அஜய் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த விபரம் வருமாறு:

அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த என்ஜினியர் அஜய். இது ஒரு 3டி திரைப் படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர், ஹரீஸ் நாராயணன் ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

 இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை. அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறியதாவது:​

 அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே தான் குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை என்றோம். அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். அஜய் உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதனால் அந்த படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: