முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் கோரிக்கை - மேட்டூர் அணை திறப்பு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 - சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக 1.8.11 முதல் தண்ணீர் திறந்து விடும்படி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளிணை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 2.8.11 முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலங்களும், சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் நிலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago