முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க போராட்டத்தால் மாணவன் பரிதாப பலி முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்-இரங்கல்

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.- 30 - தி.மு.க.வினர் நேற்று 29 ம் தேதி நடத்திய போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை கடுமையாக  கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, மாணவன் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து,அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார்.  இது குறித்து  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சமச்சீர் கல்வி குறித்து தமிழ்நாடு அரசால் உச்ச nullதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனு விசாரணையில் இருக்கும் நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று (29.7.2011) போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க. அழைப்பு விடுத்ததோடு, வகுப்புகளை மாணவ​மாணவியர் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. எனினும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய தி.மு.க.வின் இந்த வற்புறுத்தலை புறக்கணித்து, தமிழகத்தில் மொத்தம் உள்ள 47,88,624 மாணவ​மாணவியரில் 44,74,435 மாணவ, மாணவியர், அதாவது 93.4 விழுக்காடு மாணவ​மாணவியர் நேற்று பள்ளிகளுக்கு வருகை புரிந்திருந்தனர்.  இதிலிருந்து தி.மு.க.வின் இந்தப் போராட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் nullண்டி கலைவாணன்  தூண்டுதலின் பேரில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது நேற்று தடுக்கப்பட்டது என்றும், அதனால் 153 மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு சென்றனர் என்றும், அவர்களும் வலுக்கட்டாயமாக பள்ளியிலிருந்து தி.மு.க.வினரால் வெளிக்கொண்டு வரப்பட்டனர் என்றும் ,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 இதனையடுத்து, இவர்களில் சிலர் தங்கள் இல்லங்களுக்கு செல்வதற்காக வேளாங்கண்ணி  தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் பயணித்ததாகவும்,  மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் திருச்சியிலிருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது அரசுப் பேருந்து மோதி, அருகில் உள்ள சிறிய கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததாகவும், அதில் மாணவன் விஜய் மரணம் அடைந்தான் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.  
மாணவன் விஜய் விபத்தில் மரணம் அடைந்தான் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயருற்றேன்.  மாணவன் விஜய் இறப்பதற்கு காரணமான தி.மு.க.வின் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  தி.மு.க.வின் தேவையற்ற போராட்டத்தின் காரணமாக, தி.மு.க. விஷமிகளால் ஒரு அப்பாவி மாணவனின் உயிர் பலியாக்கப்பட்டுவிட்டது. மாணவன் விஜய்யை இழந்து வாடும் அவனது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த மாணவன் விஜய் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்