முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் எடியூரப்பாவுக்கு ஆதரவு பெருகிறது

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.- 30 - கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா செய்துள்ள முதல்வர் எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையொட்டி புதிய முதல்வரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முதல்வர் எடியூரப்பாவை பதவியில் இருந்து விலகுமாறு பாரதிய ஜனதா மேலிடம் உத்தரவிட்டது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள எடியூரப்பா, ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார். அதனால் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக கட்சி மேலிட தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி ஆகியோர் நேற்று பெங்களூர் வந்துள்ளனர். அவர்கள் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். இன்று எடியூரப்பாவுக்கு பதிலாக புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்