முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கள் துறை சார்ந்த விபரங்களை விரல் நுனியில் வைத்திருங்கள்-மாயாவதி உத்தரவு

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

லக்னோ,ஜூலை.- 30 - பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பேசுவதற்காக வீட்டில் பயிற்சி செய்யுங்கள் என்று தனது கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.  உத்தர பிரதேச மாநில அமைச்சர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. எம்.எல்.ஏக்களின் கூட்டம் லக்னோவில் உள்ள மாயாவதியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மாயாவதி, நாடாளுமன்றம், சட்டசபையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வீட்டில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ள ஆக்கிரமிப்பு, விலைவாசி உயர்வு, மத்திய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள், லோக்பால் மசோதா ஆகியவை குறித்து எம்.பிக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது குறித்து நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தில் குறிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ஆகஸ்ட் 5 ம் தேதி உத்தரபிரதேச மாநில பேரவை நடக்கவிருக்கிறது. இங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்டவை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூற தயாராக உள்ளன. இதனை எதிர்கொண்டு பதிலளிக்க அமைச்சர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்ற கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்