முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐந்தருவியில் 40 ஏக்கரில் அருவி பூங்கா விரைவில் திறக்கப்படும்-எம்.எல்.ஏ. சரத்குமார் பேட்டி

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

தென்காசி. ஜூலை. - 30 - குற்றாலம் ஐந்தருவியில் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் செலவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் ஐந்தருவி பூங்கா பணி நிறைவு பெற்றுவரும் நிலையில் விரைவில் திறக்கப்படும் என தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் அந்த பூங்கா அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஐந்தருவி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அருவி பூங்கா அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஐந்தருவி பழத்தோட்டம் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் சுமார் 40 ஏக்கர் பரப்பில் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் செலவில் அருவிப் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.  
மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெறும். இந்த பூங்காவில் சிறுவர் பூங்கா, நீரூற்று, மிருககாட்சி சாலை, பறவைகள் சரணாலயம், உள்ளிட்ட 25 வகையான அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நிச்சயமாக குற்றாலம் வருகை தரும் உல்லாசப்பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், அவர்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் திகழும். மேலும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவிடம் குற்றாலத்தை உலக சுற்றுலாத்துறை வரைபடத்தில் சேர்க்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளேன். முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுபற்றி கோரிக்கை வைப்பேன். நிச்சயமாக குற்றாலம் உலக சுற்றுலா வரையபடத்தில் இடம்பெற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ளுவார். குற்றாலம் என்றாலே இங்குள்ள அருவிகளில் நன்றாக குளிக்கலாம் என்ற நிலை மாறி குற்றாலம் குளிப்பதோடு உல்லாசப் பயணிகளுக்கு பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. என்ற நிலையை உருவாக்குவோம். மேலும் குற்றாலத்தில் தீம்பார்க் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாத் தளங்களை போல குற்றாலத்தையும் கொண்டு வரவேண்டும். ஐந்தருவி அருவி பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்வேன். அடுத்த ஆண்டுக்குள் குற்றாலம் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் தோட்டகலைத்துறை மற்றும் அருவி பூங்கா அதிகாரி முத்துமாலை அருவி பூங்காவில் அமைய உள்ள பல்வேறு அம்சங்கள் பற்றியும் மேலும் தேவையாந அம்சங்கள் குறித்தும் எம்.எல்.ஏ. சரத்குமாரிடம் தெரிவித்தார். அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்