முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் மேம்பாலம் அருகே சர்வீஸ்ரோடு அமைக்க நடவடிக்கை-சரத்குமார் உறுதி

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

தென்காசி. ஜூலை. - 30 - தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் ரோடு அமைக்க கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்தும் இன்றுவரை சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதுபற்றி பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமாரிடம் புகார் கூறினார்கள். தகவலறிந்த எம்.எல்.ஏ.சரத்குமார் உடனடியாக தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே கேட்டின் வடபகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க இடையூறாக இருக்கும் பெரிய பாறைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். உடனடியாக அந்த பெரிய பாறைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் ரயில்வே கேட்டின் தென்பகுதியில் வாறுகால் இல்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாக இருந்ததால் உடனடியாக தென்காசி நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.
அப்போது எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் பேசியதாவது:-  தென்காசி ரயில்வே மேம்பால பணி, சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டிய இடத்தில் உள்ள கட்டிடங்கள் இதுவரை முழுமையாக அகற்றப்பட வில்லை. அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடு வழங்க காலதாமதம் ஆவதால் இந்த பணிகள் நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரம் முதல் 10 நாட்களுக்குள் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு விடும்.ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதற்கு காரணம் மறுதிட்ட வரைபடம், மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும். இன்னும் 10 நாட்களுக்குள் இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும். இந்த பணி முடிய குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகலாம். மேலும் ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணியும் துரிதப்படுத்தப்படும். என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது தென்காசி கோட்டாட்சி தலைவர் காங்கேயன் கென்னடி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், சமத்துவ மக்கள் கட்சியின் மாநில தொழிலாளர் பிரிவு தலைவர் சுதாகரன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, நகர செயலாளர் வில்சன், ஒன்றிய செயலாளர் மிராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்