முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசுக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை-ஜெயலலிதா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 31 - அ.தி.மு.க அரசுக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் ஜெயலலிதா முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- மத்திய அரசு கொண்டுவர உள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவுக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறீர்கள். இது குறித்து மற்ற மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்டுவீர்களா?
பதில்:- தேவைப்பட்டால் இது குறித்து கடிதம் எழுதுவேன்.
கேள்வி:- தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே?
பதில்:- தி.மு.க. மீது பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யவில்லை. நில அபகரிப்பு சம்மந்தமாக தி.மு.க ஆட்சியில் கொடுத்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதி.மு.க. ஆட்சி வந்தவுடன் கடந்த 2 மாதங்களில் தனிப்பிரிவு ஒன்றை அமைத்து அதில் காவல்துறையினருக்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் சில நடவடிக்கை எடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில்தான் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதில் அரசியல் பழிவாங்கும் படலம் எதுவும் இல்லை.
கேள்வி: பத்திரபதிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் பதில் அளிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே?
பதில்:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
கேள்வி:- லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை என்று நீங்கள் கூறியிருந்தீர்களே?
பதில்:- அது வேறு, இது வேறு. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 20 சதவீதம் கலைஞர் தொலைக்காட்சிக்கு போயிருப்பதை கண்டு பிடித்து அந்த தொலைக்காட்சியில் சம்மந்தப்பட்ட கருணாநிதியையும் விசாரிக்க கூறுவீர்களா?
பதில்:- இது சம்மந்தமான விசாரணையை சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நான் பதில் சொல்ல முடியாது. அது பொருத்தமாகவும் இருக்காது.
கேள்வி:- இலங்கை பிரச்சினையில் தேசிய பாதுகாப்பு செயலாளர் தங்களிடம் என்ன பேசினார்?
பதில்:- இலங்கை பிரச்சினையில் தேசிய பாதுகாப்பு செயலாளரிடம் நான் கூறினேன். மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கூறினேன். இதற்கு சாதகமான எந்த பதிலும் வரவில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கை பிரச்சினையில் என்ன பேசினாரோ, அதை எப்படி பேசினாரோ அதை பிரதிபலிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள். அதேபோல் அ.தி.மு.க.- எம்.பி.கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தீர்மானம் மற்றும் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.
தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், அரசு கேபிள் டிவி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago