முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி​-ஸ்டாலின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 31 -​ சமச்சீர் கல்வி விவகாரத்தில் மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தமிழக அரசு  தொடுத்துள்ளது. சமச்சீர் கல்வியை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், ஆசிரியர்கள், பெற்றோர்களை போராட்டத்துக்கு தி.மு.க. தூண்டி விட்டதாகவும், இது கோர்ட்டு அவமதிப்பு செயல் என்று தமிழக அரசு குற்றம் சாட்டியது.மேலும் தமிழக அரசு சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.
கல்வித்துறை செயலாளர் இந்த வழக்குக்கான மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-​ சமச்சீர் கல்விக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகனும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை தி.மு.க. அறிவித்தது.
எனவே இந்த போராட்ட அழைப்பு வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் விடப்பட்ட அழைப்பாகும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மக்கள் உணர்வை தூண்டி ஒரு கருத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். போராட்ட தினத்தன்று சன் டி.வி. சானலில் ஒரு வக்கீலின் பேட்டி ஒளி பரப்பானது. அந்த வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை தெரிவித்தார். இதை அனுமதிக்க முடியாதது. மேலும் கோர்ட்டு வழக்கு விசாரணையை அவமதிப்பது போல உள்ளது. இது போன்ற பேட்டிகள் கலைஞர் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பானது. சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தாதது பற்றியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருப்பது பற்றியும் தவறான தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.
இதற்காக குறிப்பிட்ட அந்த வக்கீல்கள் மீதும், அதை ஒளிபரப்பிய சன் டி.வி., கலைஞர் டி.வி. மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி ஆகியோர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago