முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1-ம் தேதி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க சதி திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

திருவாரூர். ஜூலை.- 30 - வருகிற 1ந்தேதி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது. திமுக எந்த சலசலப்பிற்கும் அஞ்சாது என்று கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் கூறினார். திருவாரூர மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை மு.க.ஸ்டாலின் சென்றார். பின்னர் திருத்துறைப்nullண்டிக்கு சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலைஇயல் இந்த கைது பற்றி மு.க.ஸ்டாலின் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி வருமாறு:-
தஞ்சையில் இருந்து நேற்று காலை கார் மூலம் திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தேன். பின்னர் நேற்று முன்தினம் பஸ் விபத்தில் மரணமடைந்த மாணவன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறுதற்காக கொரடாச்சேரிக்கு நாணும், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், மதிவாணன், விஜயன் எம்.பி. மாவட்ட செயலாளர் nullண்டி கலைவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றோம்.
பின்னர் அங்கு மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு திருத்துறைப்nullண்டியில் ஒரு படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதறகாக காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வழியில் சுமார் 200,300 போலீசார் எங்கள் வாகனத்தை வழிமறித்து நின்றனர்.  பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி, எனது காரில் இருந்த மாவட்ட செயலாளர் nullண்டி கலைவாணனை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு நாங்கள் எந்த காரணத்திற்காக கைது செய்வீர்கள்? வாரண்டு உள்ளதா? என்று கேட்டோம்.
அதற்குள் போலீசார் எங்களை சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்தனர். உண்மையில் எங்களை அந்த இடத்தை விட்டு செல்ல விடாமல் போலீஸ் வாகனத்தை கொண்டு மறைத்து மறியல் செய்தது போலீசார் தான். பின்னர் போலீசார் எங்களை மேலிட உத்தரவுப்படி கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். ஆனால் எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை. திருவாரூருக்கி அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. வருகிற 1ந்தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தை தடுக்கவே இந்த சதி நடைபெறுகிறது. இந்த சலசலப்பிற்கு அஞ்சமாட்டோம். இன்று (நேற்று) க”லை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல் ஜாமீனில் வெளிவந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் வீரபாண்டி ஆறுமுகமும் இன்று (நேற்று) தீடீரென கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து நானும் இன்று(நேற்று) கைது செய்யப்பட்டு உள்ளேன். இதற்கெல்லாம் மக்கள் மன்றத்தில் நிச்சயம் முதல்வர் பதில் சொல்ல வேண்டும். இந்த நடவடிக்கைகளை குறித்து நாங்கள் nullதிமன்றத்தை அணுக உள்ளோம். அந்த nullதிமன்றத்திலும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்