முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேப்பர் மில்லை மிரட்டி வாங்கிய வழக்கில் தி.மு.க.எம்.எல்.ஏ. அன்பழகன் கைது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பூர்,ஜூலை.- 31 - கோவையில் உள்ள பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கிய வழக்கில் சென்னை திருவெல்லிக்கேணி எம்.எல்.ஏ. அன்பழகனை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் திருப்பூர் மாவட்ட போலீசில் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை, தர்மத்தன்பட்டி, காடுவெட்டி பாளையத்தில் எனக்கு சொந்தமான ஜீவா பேப்பர் மில் இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த மில்லை தி.மு.க. செயலாளரான அன்பழகன் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட 5 பேர் மிரட்டி எழுதி வாங்கினர். அந்த மில்லை கோவையை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அந்த மில்லின் மதிப்பு ரூ.12. 5 கோடியாகும். மில்லை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு சென்னை சென்றனர். அங்கு சேப்பாக்கும் திருவெல்லிக்கேணி, எம்.எல்.ஏ.அன்பழகனை அவர்கள் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ.அன்பழகனை நேற்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு சென்னையில் இருந்து திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
உடுமலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான ரூ.12.5 கோடி மதிப்புள்ள பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதற்காக வந்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னையில் கைது செய்யப்பட்டார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரது குடும்பத்தினர்களிடம் முறைப்படி தகவல் தெரிவித்து கைது செய்தனர். பின்பு அவர் தகுந்த பாதுகாப்புடன் திருப்பூர் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago