முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவன் விஜய் சாவுக்கு காரணமானவர் மீது முழு விசாரணை நடத்திடுக​-சி.பி.எம் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 31 - கொரடாச்சேரி பள்ளி மாணவன் சாவுக்கு காரணமான விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டுமென்று சி.பி.எம். கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் (29.7.2011) வேளாங்கண்ணி ​ தஞ்சாவூர் அரசு பேருந்தில் சென்ற போது சாலையின் எதிரே வந்த லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்து விஜய் (வயது 12) என்ற மாணவன் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். மாணவன் விஐய்யை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த விபத்திற்கு திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளர் nullண்டி கலைவாணன் காரணமென்று அவரை கைது செய்ய காவல்துறை முயன்றதாகவும், இதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உட்பட பலர் நேற்று (30.7.2011) திருத்துறைப்nullண்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்துள்ள விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது சரியான நடைமுறையாகாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.
எனவே, பேருந்து விபத்து குறித்து ழுழுமையாக விசாரித்து விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்வது உள்ளிட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்ற போது கைது செய்யப்பட்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு சி.பி.எம். கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்