முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவன் இறந்ததற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை - 31 - மாணவன் இறந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எதிர்காலத்தில் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி சட்டம் இயற்றவும் வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலபாண்டியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் நேற்று விஜய் என்ற மாணவன் இறந்த செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். பள்ளி மாணவர்களை போராட்டத்திற்கு தி.மு.க. அழைத்தது மிகவும் தவறான செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தனியார் பள்ளிகள் நினைத்தால் லட்சக்கணக்கான மாணவர்களை ரோட்டிற்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தலாம். ஆனால், அது செய்தல் கூடாது என்பதனை நன்கு அறிந்த கல்வியாளர்களாகிய நாங்கள் அதை செய்ய       விரும்பவில்லை. அவ்வாறு செய்யவும் மாட்டோம்.
நேற்று போராட்டம் என்ற முறையில் பள்ளிகளுக்குள் நுழைந்து மாணவர்களை வற்புறுத்தி சாலைகளுக்கு அழைத்து வந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகின்றோம். இனி எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் குறிப்பாக பள்ளி மாணவர்களை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள செய்தல் கூடாது என முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம். ஏனென்றால் பள்ளி மாணவர்கள் வெளியுலகம் தெரியாதவர்கள், பச்சை குழந்தைகள், மன முதிர்ச்சி பெறாதவர்கள். பள்ளி மாணவர்களை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள யாரும் வற்புறுத்தக் கூடாது என்றும், நேற்று நடைபெற்ற துயரமான நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர் மீதும் உடனே நடவடிக்கை எடுக்குமாறு பேசினேன்.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரியும் மேலும், பள்ளி மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது என தனிச்சட்டம் இயற்ற வேண்டு
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்