முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அரசு மீது அமெரிக்க பொருதாரா தடை காரணமான ஜெயலலிதாவுக்கு நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 31 - இலங்கை அரசு மீது அமெரிக்க அரசு பொருளாதார தடைவிதிக்க அடித்தளம் அமைத்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் செற்குழு வாழ்த்து நன்றியை தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 29.7.11 அன்று மாலை 6.30 மணியளவில் ஆந்திரா கல்சுரல் சோசியல் கிளப்பில் கூடியது. செயற்குழு கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் ராதாரவி, உபதலைவர் ஆர்.விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீகாந்த், சார்லி, சின்னி ஜெயந்த், ஏ.சகுந்தலா, குயிலி, சத்யபிரியா, தி.பாத்திமாபாபு, கே.ஆர்.செல்வராஜ், நம்பிராஜ், கே.என்.காளை, விச்சு,  நந்தகுமார், வீரமணி, எம்.ராஜேந்திரன், ராஜ்குமார், வி.சி.ஜெயமணி, கே.ராஜன், ஏ.கே.ராஜேந்திரன், பெஞ்சமின், சேலம் சவுண்டப்பன், புதுக்கோட்டை இசையரசன், மதுரை பிரசாத் வி.சி.ராஜேந்திரன், நாமக்கல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வருமாறு:-

உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் பாதுகாக்கும், தாயுள்ளம் கொண்டவர் என்பவர் நிரூபிக்கும் வகையில், போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடைவிதிக்க கோரியும், கச்சதீவு பிரச்சனையால் பாதித்த தமிழக மீனவர்களை பாதிக்கப்படும் ஒரே வழி கச்சதீவை மீண்டும் இந்திய அரசு தம் வசம் மீட்பது தான் என்று போராடி வரும், தமிழக அரசுக்கும் மேற்கண்ட பிரச்சனைகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றென்றும் துணை நிற்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கு ஹிலாரி கிளிண்டன் சரித்திரத்தில் முதல் முறைாயக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த, சரித்திர நிகழ்வு நடைபெற்றதற்கும், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் வாழும் நம் தொப்புள் கொடி உறவான தமிழ் மக்களை கொன்று குவித்த போர் குற்றம்புரிந்த இலங்கை அரசு மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்ததற்கு, அடிதளம் அமைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நன்றியை ஏகமனதாக தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்