முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

54 ஏரிகளை நவீனபடுத்த முதலமைச்சர் உத்தரவு

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.1 -  வேலூர் -காஞ்சிபுரம் -திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கூவம் உபவடி நிலத்தின் கீழ் வரும் 54 ஏரிகள் மற்றும் கால்வாய்களை ரூ.22.25 கோடியில் புனரமைத்து நவீனப்படுத்தி பாசன பயன்பாட்டுக்கொண்டு வர தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பொரும்பாளான மக்கள் வேளாண்மைத் தொழிலையே நம்பி இருப்பதால், வேளாண்மைபெருமக்கள் வாழ்வில் வளம்பெறவும்,  அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கவும், வேளாண் உற்பத்தித்திறனையும்,வேளான்ண் பெருமக்களின் வருமனத்தையும் அதிகப்படுத்துவதற்காகன பல்வேறுதிட்டங்களை முதலமைசச்ர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. நீடித்த வேளாண் வளர்ச்சியானது சரியான அளவு நீரினைப் பயன்படுத்தல் மற்றும் உற்பதத்திறனை மேம்படுத்ததல் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இதனை அடைந்திட, பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைத்திடும் வகையில், நீர்வள அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது.

அந்த வகையில், மாநிலத்தில் பாசன நிலங்களுக்ககு ஆதாரமாக உள்ள பாசன உள்கட்டமைப்புக்களை நவீனப்படுத்திய, பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன், உலக வங்கி உதவியுடன் நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

நீர்வள ஆதார தொகுப்புத் திட்டத்தின் தொடர் திட்டமாக தமிழாநாட்டில் உப வடி நில கட்டமைப்பு முறையில், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை மூலம் பாசன சேவை மற்றும் பாசன  வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 2547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டதின் ஒரு அங்கமாக வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாட்டங்களில் கூவம் உப வடி நிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் நீர்வழங்கும்  கால்வாய்களை 22 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளாளார்.

கூவம் வடிநிலம் பகுதி மற்றும் நகரப் பகுதி என இரு கூறுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நகரப் பகுதி சென்னை மாநகர எல்லைக்குட்பட்டது. கூவம் வடிநிலத்தில் 80 முறைசார்ந்த மற்றும் முறைசாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை புனரமைத்து நவீனமயமாக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் சீர்படுத்துதல், சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் சீர்படுத்தல், ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், நீர்வழங்கு கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களிலுள்ள 54 முறை சார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 662420 எக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசனவசதி மேம்பாடு அடையும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்