முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக மோசடி

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1 - மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்த விபரம் வருமாறு:- எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கிதராமலும், பணத்தை திருப்பி தராமல் தன்னை மோசடி செய்ததாகவும் தன்னை மிரட்டியதாகவும், எபினேசர் (26) என்பவர் புறநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் போலீசார் 420, 506(க) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையொட்டி சென்னையை சேர்ந்த கிருஷ்ணன் (57), நாகூர்பாஷா (24), முரளி (42), சிவசத்தியராஜா (39), சுரேஷ் (29), அஜித் (28), சீனிவாசன் (48) ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதேபோல சென்னையை சேர்ந்த அனந்த பத்மநாபன் (36) என்பவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு தனது உறவினருக்கு இடம் வாங்கி தருவதாக தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கிதராமலும் மேலும் பணத்தை திருப்பி தராமல் தன்னை மிரட்டுவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 420, 506(2)  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சென்னையை சேர்ந்த சத்திய நாராயணன் (30), அலங்காரமுத்து (30), ஞானவீர ராஜகுரு (25), வருண் (25), சதீஷ்கண்ணா (23), கிருஷ்ண முரளி (24), அசோக்குமார் (21) ஆகியோர் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புறநகர் காவல் ஆணையாளர் கரன்சின்கா அம்பத்தூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மதுரவாயல் சரக காவல் உதவி ஆணையாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் போரூர் ராமச்சந்திரா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்து பூவிருந்தவல்லி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதித்துறை நடுவர் உத்தரவின்படி குற்றவாளிகள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

வழக்கு விசாரணையை மிகவும் துரிதமாக மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த எஸ்.ஆர்.எம்.சி. காவல்துறையினரை சென்னை புறநகர் காவல் ஆணையாளர் பாராட்டினார். மேலும் இதுபோல் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக யாரேனும் பொதுமக்களை அணுகினால் அதை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை புறநகர் காவல் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago