முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்க முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு வகுப்புக் கலவர தடுப்பு சட்ட (2011) மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

இந்த சட்டத்தின் மூலம் வகுப்புக் கலவரம் மற்றும் குறிப்பிட்ட இனத்தினரை தாக்குவதை தடுக்கும் மசோதா என்ற பெயரில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாற்று வழியில் மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து மத்தியில் குவிப்பதற்காகவும் மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதற்கும் முழுமையாக மத்திய அரசின் தயவில் இருப்பதற்காகவும் முயற்சி மேற்கொள்வதாக உள்ளது. மேலும் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் அபாயத்தில் தொடர்ந்து வைத்திருக்கச் செய்வதாகவும் உள்ளது. 

இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் அல்லாத அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். எனது அறிக்கையின் நகலையும் அனைத்து காங்கிரஸ் அல்லாத, தி.மு.க. அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி இந்த பாசிச சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். சரியாக சிந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய கூட்டணி அரசின் உண்மையான நோக்கத்தை அறிந்து அதனை அறிமுக நிலையிலேயே தூக்கி எறியுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago