முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த தொண்டர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,ஆக.2 - அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்குத் தலா 25,000/- ரூபாய் வீதம் 23 லட்சம் ரூபாயும், அகால மரணமடைந்த 6 அ.தி.மு.க. உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 6 லட்சம் ரூபாயும்,ஆக மொத்தம் 29 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்.  நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்துக்கு வந்த பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., , அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர். அத்தோடு அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான தொழிலாளர்கள், மற்றும் தொண்டர்கள் தொழிற்சங்கக் கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் கைகளில் ஏந்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், பிற அணி நிர்வாகிகளும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/-​ ரூபாய் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொருவர் வீதமும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும், ஆக மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/-​ ரூபாய் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என  பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 9.7.2011 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று, பிற்பகல் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அறிவிக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 23 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார். அதே போல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நம் அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த மற்றும் கழகப் பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த 6 அ.தி.மு.க. உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்குத் தலா 1,00,000/-​ ரூபாய் வீதம் 6,00,000/-​ ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார். 

தங்களுடைய குடும்ப சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,  தமிழக முதலமைச்சர் ஜெலலிதாவுக்கு, நிதியுதவியை பெற்றுக்கொண்ட தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும், அகால மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பத்தினரும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

 

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரில் நிதியுதவி பெற்ற அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 92 நலிந்த தொழிலாளர்களின் பட்டியல்  வருமாறு: 

சீ. மாலதி - கட்டடத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் ,  எஸ். தீனதயாளன் - ஓட்டுநர் ​ வியாசர்பாடி பணிமனை மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,     அ.செல்லமுத்து - அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்,  ஆர். தனசேகரன்- ஓட்டுநர் ​ தி.நகர் பணிமனை, மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  சு. கிருஷ்ணன் - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம், க.மீனா - முன்னாள் நடத்துனர், கல்பாக்கம் பணிமனை   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,   ஆர். சாம்பசிவம் - அண்ணா கைத்தறி தொழிலாளர் சங்கம், இ.சுந்தரம் - ஓட்டுநர், ஓரிக்கை பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  ரா. சிவா - அண்ணா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம்,  ஆ. கோவிந்தசாமி - நடத்துனர், nullந்தமல்லி பணிமனை மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  பி. செல்வராஜ் - வேலூர் கிழக்கு மாவட்ட அண்ணாபொதுத் தொழிலாளர் சங்கம்,  கே. பாண்டுரங்கன் - நடத்துனர், ஆற்காடு பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  எஸ். நாகம்மாள் - அண்ணா பீடித் தொழிலாளர் சங்கம், கே.எம். விஸ்வநாதன் - ஓட்டுநர், திருப்பத்தூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  எஸ். லட்சுமி - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம், என்.சி.வாசுதேவன்  - நடத்துனர், செய்யாறு பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கு. பெரியாயி - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம், கே. சேகர் - நடத்துனர், திருவண்ணாமலை பணிமனை​2, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  த.ஸ்ரீராமமூர்த்தி - விக்டரி கெமிக்கல்ஸ் அண்ணா தொழிலாளர் சங்கம், இரா. ஜெயபாலன் - ஓட்டுநர், கடலூர் பணிமனை​2, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  சி. ராஜேந்திரன் - தமிழக அண்ணா கட்டடத் தொழிலாளர்கள் சங்கம், கே.எம். சம்பத் ராஜா - தொழில்நுட்ப உதவியாளர், சிதம்பரம் பணிமனை​1 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  ரா. சுவாமிநாதன் - விழுப்புரம் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கம்,  மு. வேலாயுதம் - தொழில்நுட்ப பணியாளர், விழுப்புரம்.ஆர்.சி. யூனிட்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கே. சேகர் - செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அண்ணா தொழிற்சங்கம், எஸ். ரவீந்திரன் - முன்னாள் ஓட்டுநர், கள்ளக்குறிச்சி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  ஏ. பத்மாவதி - ஹைடெக் அண்ணா தொழிலாளர் சங்கம், கி. புவனேஸ்வரி - முன்னாள் நடத்துனர், திருப்பத்தூர் பணிமனை,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  க. வேல் - பஞ்சாலை அண்ணா தொழிற்சங்கம், எஸ்.வெண்ணிலா - முன்னாள் நடத்துனர், சேலம் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், த.லைலா - நாட்டுபுற கிராமிய கலைஞர்கள் அண்ணா தொழிற்சங்கம், ஏ.பி. கந்தசாமி - புதுப்பித்தல் பிரிவு, சேலம் மத்திய பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  கி. துரைசாமி - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம், சு. சாந்தாமணி - முன்னாள் நடத்துனர், ஜான்சன்பேட்டை பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், பி. தமிழ்செல்வி - ண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம் - எஸ்.எம். இராமசாமி - நடத்துனர், நாமக்கல் புறநகர் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், சேலம், ரா. சண்முகசுந்தரி - அண்ணா தையல் தொழிலாளர் சங்கம், ச. அகஸ்டியன் அருள்ராஜ் -உதவியாளர், பள்ளிப்பாளையம்  ஈ​2 பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், ஈரோடு.   

விஜயபாபு - அண்ணா விசைத்தறி தொழிலாளர் சங்கம், ப. மாரிமுத்து-ஹெல்பர், தாராபுரம் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  பா. கோகிலா - அண்ணா தையல் தொழிலாளர் சங்கம்,    தா. தர்மராஜன் - ஓட்டுநர், அந்தியூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  பா. குமரன் - பாரம் தூக்கும் அண்ணா தொழிலாளர் சங்கம்,  ம. சரோஜா - முன்னாள் நடத்துனர், உடுமலை பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கோவை )   கிரி - பாரம் தூக்கும் அண்ணா தொழிலாளர் சங்கம், கே. குருசாமி - நடத்துனர், ஒண்டிப்புதூர் பணிமனை​1 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், வி. அய்யப்பன்- அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம்,    ச. சரோஜினி - முன்னாள் ஓட்டுநர் (தலைமையகம்),  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,   அ. லிங்கேசன் - அண்ணா தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், பெ. சாந்தி - முன்னாள் நடத்துனர், குன்னூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், மா. முருகேசன் - அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம்,     க. ஆறுமுகம் - தொழில்நுட்ப பணியாளர், தீரன் நகர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம்,  திருச்சி   ம. வில்லியம் அருள்தாஸ் - திருச்சி புறநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம்,    ரா. மாலதி - முன்னாள் ஓட்டுநர், கண்டோன்மென்ட் புறநகர் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், பெ. பார்வதி - கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்கம், ப. சீத்தாராமன் - நடத்துனர், ஜெயங்கொண்டம் பணிமனை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி.பெ. இந்திரபாண்டியன் - வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனையாளர் அண்ணா தொழிற்சங்கம், கரூர்.மு. அமுதா - முன்னாள் ஓட்டுநர், கரூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருச்சி,

 ஆர். சரோஜா - கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்கம், வி. ரெங்கசாமி - நடத்துனர், சிதம்பரம் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம்,  கோ. தமிழ்செல்வி- அண்ணா சமையல் தொழிலாளர் சங்கம்,     இளங்கோவன் - ஓட்டுநர், தஞ்சை புறநகர் பணிமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம்,   தி. செண்பகவல்லி - அமைப்புச்சாரா தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கம்,  பி. அன்பழகன் - நடத்துனர், நாகப்பட்டினம் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம், தி. உஷாராணி - விவசாய அண்ணா கூலித் தொழிலாளர் சங்கம்,  ந. மோகன் - நடத்துனர், திருவாரூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், கும்பகோணம் ,  மு. மலர் - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம்,    ப. கருப்பண்ணன் - ஒட்டுநர், திருச்சி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், புதுக்கோட்டை, எஸ். கருப்பசாமி - மதுரை மாநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம், பி. கண்ணையா - தொழில்நுட்ப பணியாளர், புதூர் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், மதுரை,  சு. சக்கணன் - அண்ணா சலவைத் தொழிலாளர் சங்கம்,  பி. ரெங்கன் - நடத்துனர், உசிலம்பட்டி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், மதுரை.எஸ். சேர்மலை - அண்ணா கட்டடத் தொழிலாளர்கள் சங்கம்,     கே. ஜெயராமன் -நடத்துனர், பெரியகுளம் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திண்டுக்கல்,  வி. வீராச்சாமி - அண்ணா கட்டடத் தொழிலாளர் சங்கம்,    ஐ. சிவக்குமார் - நடத்துனர், திண்டுக்கல் பணிமனை​2 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திண்டுக்கல்,  டி. பரமசிவம் - விருதுநகர் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கம்,     எம். தங்கராஜ் - ஒட்டுநர், அருப்புக்கோட்டை பணிமனை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், விருதுநகர்,  மு. இராஜேந்திரன் - அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்,   வீ. சாந்தி - முன்னாள் ஓட்டுநர், மதுரை பணிமனை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், காரைக்குடி, . மோ. சமயமுத்து- அமைப்பு சாரா பிரிவு அண்ணா தொழிற்சங்கம்,   இரா. நாகராஜன்- ஓட்டுநர், பரமக்குடி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், காரைக்குடி, மு. ஆறுமுகம் - அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்,    சு. துரை - நடத்துனர், சங்கரன் கோவில் பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருநெல்வேலி,    கெ. சந்தோச ராணி - அண்ணா பீடி தொழிலாளர் சங்கம்,     மா. திருமலைக்குமார் - ஓட்டுநர், செங்கோட்டை பணிமனை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருநெல்வேலி, பெ. கணேசன் - அண்ணா விவசாய தொழிலாளர் சங்கம்,     ஏ.ஜெ. செல்வராஜ் - ஓட்டுநர், திசையன்விளை பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், திருநெல்வேலி,  எஸ். இசக்கியம்மாள் - பஞ்சாலை அண்ணா தொழிலாளர் சங்கம்,    ஐ. வசந்தி - முன்னாள் தொழில்நுட்ப பணியாளர், நாகர்கோவில் தொழிற்கூடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம், நாகர்கோவில்,   ஏ. பாப்புசாமி - புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்கம்,     வை. கோவிந்தராஜீ - முன்னாள் நடத்துனர், புதுச்சேரி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் ஆகியோர் நேரில் வந்து நிதியுதவியை ஜெயலலிதாவிடம் பெற்றுக்கொண்டனர்.

 

குடும்ப நல நிதியுதவி பெற்ற மறைந்த உடன்பிறப்புகள் குடும்பங்களின் பட்டியல்  வருமாறு :

1.ஏ. மதன்ராஜ் - குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் காஞ்சிபுரம் மேற்ரு மாவட்டம், 2.ஜெ. சந்துரு - 27வது வார்டு புரட்சித் தலைவி பேரவை செயலாளர் திண்டிவனம் நகரம் விழுப்புரம் வடக்கு மாவட்டம்,3. சின்னதம்பி -சேலம் மாநகர் மாவட்டம். 4.எம்.ஜி. (எ) வி. துரைசாமி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஈரோடுமாவட்டம், 5. ரூபினி - கோவை மாநகர் மாவட்டம்.6. கே. கருப்பையன் ஒரத்தநாடு தொகுதி தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஆகியோரின் குடும்பத்தினர் ஜெயலலிதாவிடம் நேரில் நிதியுதவியைபெற்றுக்கொண்டனர். நிதியுதவிபெற்றுக்கொண்ட அனைவரும் தங்களது நன்றியினை முதல்வருக்கு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்