முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி: தா.பழூர் தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர் மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

அரியலூர்.ஆக.2 - ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்வி நிறுவனத்திற்காக 12 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஏமாற்றி நிலத்தை பிடுங்கி கொண்டதாக திமுகவை சேர்ந்த தா.பழூர் ஒன்றியக்குழுத்தலைவர் க.கொ.க.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சின்னப்பன், வீ.முத்தையா, கனகவள்ளி. கே.ஆர்.சண்முகம் உள்ளிட்ட 6பேர் மீது அரியலூர் மாவட்ட எஸ்.பி. கண்ணப்பனிடம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தனலெட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனலெட்சுமி அரியலூர் மாவட்ட எஸ்.பி.கண்ணப்பனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் கிராமத்தை சேர்ந்தவரான ராமலிங்கம் என்பவரது மனைவி தனலெட்சுமி. எனக்கு தா.பழூர் கிராமம் சீனிவாசபுரத்தில் என் கணவர் சம்பாதித்த சொத்து 15 ஏக்கர் உள்ளது. இது எனது கணவர் சம்பாதித்த தனிப்பட்ட சொத்தாகும். 

எனது கணவரின் தாயாரான கனகவல்லிக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாது. அதலால், எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் கனகவல்லி ஆகியோரின் எதிர்கால ஜீவனாம்சத்திற்காக எனது கணவர் இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்தார். இந்த இடத்தை அவர்கள் விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் எனது கணவர் மறைவிற்கு பின்பு அவருக்கு உண்டான சொத்துக்களை எந்தவித பிரச்சனையும் இன்றி நான் மற்றும் எனது பிள்ளைகளுடன் விவசாயம் செய்து விந்தேன்.

இந்த நிலையில் கடந்த மே.மாதம் தா.பழூர் ஒன்றிய பெருந்தலைவர் க.சொ.க.கண்ணன் மற்றும் அவரசு மாமனார் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனது நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து மிக குறைந்த விலைக்கு எனது நிலத்தை கேட்டனர். நான் தற்போது விற்கவில்லை என்று மறுத்து விட்டேன். இதனால் எனக்கும் எனது மாமியார் கனகவல்லிக்கும் நிலப்பிரச்சனையை உருவாக்கி விட்டனர். 

மேலும் எனது மாமியாரை கையில் வைத்துக்கொண்டு தனது செல்வாக்கை பயன்படுத்தி க.கொ.க.கண்ணன் மற்றும் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனக்கு உண்டான சொத்தில் எனது மாமியாரை கூட்டாக சேர்த்து அதற்கான உத்தரவை வட்டாட்சியரிடம் பெற்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.சின்னப்பன் கடந்த 1.12.2010 அன்று தனது உடன்பிறந்த சகோதரர் ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு, 1 ஏக்கர் 5 லட்சத்துக்கு விற்க கூடிய சொத்தை 1 லட்சத்து கேட்டு, 12 ஏக்கர் நிலத்தை 12,46,250க்கு கிரையம் செய்து கொண்டனர். 

பத்திரப்பதிவு அலுவலகத்திலும் எந்த ஆவணங்களையும் பார்வையிடாமல் சார்பதிவாளர் விதிமுறைகளை மீறி ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் எனது மாமியார் கனகவல்லியை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அபகரிப்பு செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் க.கொ.க.கண்ணன், கே.கே.சின்னப்பன் ஆகியோர் அடியாட்களை கொண்டு என்னை குடும்பத்தோடு வெட்டி புதைத்து விடுவதாகவும், பெட்ரோலை ஊற்றி எரித்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து நான் ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளேன். 

எனவே எனது சொந்தை அபகரித்து கொண்டவர்களிடம் இருந்து மீண்டுத் தரவேண்டும் என்றும் மேலும் எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனலெட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கெனவே இவர்கள் மீது அரசு மருத்துவ செவிலியர்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள மனையை போர்ஜரி ஆவணங்கள் மூலம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் பெரிய வீடு கட்டியுள்ளது. நரிக்குறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசை ஏமாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருவரு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்