முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கோரிக்கையால் அமளி

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 2 - அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. - பா.ஜ.க. எழுப்பிய கோரிக்கையால் ராஜ்யசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபை அடுத்ததடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 

அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் விளக்கம் அளிக்க வே ண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க எம்.பி.க்கள் மாநிலங்கள வையில் வற்புறுத்தினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவையில் எந்த அலுவலையும் கவனிக்க முடியவி ல்லை. சபாநாயகர் சபையை நடத்த முடியாமல் திணறினார். 

சுமார் 4 மாத இடைவெளிக்குப் பிறகு, பாராளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. நேற்று முன் தினம் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தினார். 

பாராளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்த அனைத்துத் தரப் பினரும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி னார். 

எந்த பிரச்சினை குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிப்ப து உகந்ததல்ல என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை வழக்கில் வாதிட்ட தொலை தொட ர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சாட்டியதை பா. ஜ.க. மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் சுட்டிக் காட்டினர். 

கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இப்பிரச்சினை குறித்து விவா திக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ டேகர் வற்புறுத்தினார். 

பல்வேறு பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் சிக்கிக் கொண்டுள்ளன என்ற தொனியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன் தினம் கருத் து தெரிவித்து இருந்தார். இதற்கும் பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித் தது. 

பா.ஜ.க. எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு பிரச்சினை, மும்பை குண்டு வெடிப்பு, பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை போன்ற பல பிர ச்சினைகளை சரமாரியாக எழுப்பினார்கள். 

அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் அ.தி. மு.க. எம்.பி.க்கள் உரத்த குரலில் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த போது, நில ஆர்ஜித மசோதா விவகாரம் தொடர்பாக, பகுஜன் சமா ஜ் கட்சி எம்.பி.க்கள் கோஷம் போட்டனர். 

இதனால் அவையில், அமளி விஸ்வரூபம் எடுத்தது. சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அமீது அன்சாரி அறிவித்தார். 

பின்னர் 12 மணிக்கு அவை கூடியவுடன் மீண்டும் அமளி தொடங்கிய து. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்  பிறகும், அமளி ஓயாததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக் கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்