முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினருக்கு ஆதரவாக ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - நிலமோசடி வழக்கியில் சிக்கிய தி.மு.க.வினருக்கு ஆதரவாக சென்னையில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்த விபரம் வருமாறு:- கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக கூறி ஏராளமானோர் போலீசில் புகார் செய்தனர். குறிப்பாக நிலமோசடிக்கு ஆட்பட்டோர் சரமாரியாக புகார் செய்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் தனி போலீஸ் பிரிவு ஒன்றை அமைத்து ஜெயலலிதா உத்தவிட்டார். இதே போல, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

போலீசாருக்கு வந்த அடுக்கான புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்டு 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வடசென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆர்ப்பாட்டம் உள்பட தி.மு.க. போராட்டத்திற்கு போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்தனர். இதனால், நேற்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள வடக்கு கடற்கரை சாலை நேற்று காலை முதலே பதட்டத்துடன் காணப்பட்டது. போலீஸ் தடையை மீறி ஸ்டாலின் தலைமையிலான போராட்டத்தில் பங்கு கொள்வதற்காகதொண்டர்கள் அங்கு குவிந்ததால் வடக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் சங்கர், மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள் அன்பு, அவினேஷ்குமார், அஸ்வின் கோட்லிஸ், பிரேம் ஆனந்த் சின்கா, நிர்மல் குமார் ஜோஷி மற்றும் 10 உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின்போது, வன்முறை ஏற்பட்டால் அதை அடக்குவதற்கு கவச உடை அணிந்த ஆயுத போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர, கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சாலை நெடுகிலும் தயார் நிலையில் நின்றிருந்தன.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர் பாபு, இளைய அருணா, நெடுமாறன், செங்கை சண்முகம், மலர்விழி, தேவராஜன், கிரிராஜன், துரைசாமி உள்பட வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் 9 மணிக்கு முன்னதாகவே வந்திருந்தனர். மு.க.ஸ்டாலின் 10.30 மணி அளவில் வந்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை கைது செய்த போலீசார் பின்னர் அவர்களை விடுதலை செய்தனர். 

இதேபோல் தென்சென்னையில், மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் சுமார் அரைமணி நேரம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கு கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago