முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஜி திமுக எம்எல்ஏ சைதை கிட்டு மரணம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஆக.5 - தென் சென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், திமுகவின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சைதை கா. கிட்டு திருச்சியில் மரணமடைந்தார்.

தென் சென்னையில் திமுகவின் பலம் வாய்ந்த தளபதிகளில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் கிட்டு. திமுக தலைவர் கருணாநிதியின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். செயலில் சிட்டு, சைதை கிட்டு என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.

இவர் நான்கு முறை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தென் சென்னையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தேவகோட்டைக்குச் சென்றிருந்த கிட்டு அங்கிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கிட்டுவின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago