முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் பாராட்டும் வகையில் உள்ளது: த. பாண்டியன்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு, ஆக. 5 - தமிழக பட்ஜெட் பாராட்டும் வகையில் உள்ளது, அதை வரவேற்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் த. பாண்டியன் தெரிவித்து இருக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் த. பாண்டியன் நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது தெரிவி த்ததாவது -  தமிழக அரசின் பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

அதில் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சங்கள் அதிகமாக உள்ள து. குறிப்பாக, சூரிய சக்தியில் இருந்து எரியும் ஒரு லட்சம் தெரு விள க்கு திட்டம் மிகவும் பயனுள்ளது. அதை வரவேற்கிறோம். 

அதே போல, சுற்று சூழலை பாதுகாக்க மரங்கள் நட ரூ. 43 கோடி ஒதுக்கி இருப்பது நல்ல நடவடிக்கையாக தோன்றுகிறது. பாலித்தீன் பைகள் உபயோகத்தை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

விவசாயத் துறையில், அறிவித்துள்ள பல நல்ல திட்டங்கள் பொது மக்  களிடம் வரவேற்பு தரும். குறிப்பாக ஆடு, மாடுகள் வளர்ப்பதன் மூல ம் இயற்கை உரங்கள் பெற இத்திட்டம் உதவியாக இருக்கும். குளம், ஏரி மூலம் நீரை சேகரிக்க 5 குளங்களை அரசு ஆழப்படுத்த எடுத்தது நல்ல முயற்சி ஆகும். 

மாணவர்களுக்கு உதவி தொகை உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்க து. நில மோசடி, நில அபகரிப்பு வழக்கில் அதிகமாக தி.மு.க. வினர் சிக்கி உள்ளனர். இலங்கையில், அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட தை இலங்கை அரசே ஒப்புக் கொண்டு உள்ளது. 

ஆனால் கருணாநிதி முள்வேலியில் அடைபட்டுள்ள தமிழர்களுக்கு இன்னும் குரல் கொடுக்கவில்லை. ராசா, பிரதமர் மீது குற்றம் சாட்டி இருப்பது கூட நட்பின் இலக்கணம் ஆகும். தொடர்ந்து பிரதமர் மெள  னம் காத்தால் அவர் குற்றவாளி என ஒப்புக் கொண்டதாக எடுத்துக் கொள்ளப்படும். 

தமிழக பட்ஜெட் சிறு, குறு தொழில் உற்பத்தி வளர பெரிதும் உதவும் . இதை பாராட்டி வரவேற்கிறோம். இவ்வாறு த.பாண்டியன் கூறி னார். பேட்டியின் போது, சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் வி.பி. குண சேகரன், தேசிய குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் செயலாளர் கள் ஜி. வெங்கடாசலம், ஆர். திருநாவுக்கரசு  ஆகியோர் உடன் இருந் தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago