முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை போட்டி ரத்து: பாகிஸ்தானுக்கு நஷ்டஈடு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, ஆக. 5 - பாகிஸ்தானில் நடக்க வேண்டிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ. 72 கோடியை சர்வதே ச கிரிக்கெட் கவுன்சில் வழங்குகிறது. இது பற்றிய விபரம் வருமாறு - 

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009 -ம் ஆண்டு மார்ச் மாதம் பாகி ஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது, தீவிரவாதிக ள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் இலங்கை வீரர்க ள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து நாடு திரும்பினார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் விளையாட எந்த ஒரு நா டும் விரும்பவில்லை. முன்னதாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்று ம் இங்கிலாந்து போன்ற நாடுகள் மறுத்து வந்தன. 

கடந்த மார்ச் , ஏப்ரல் மாதம் உலகக் கோபபை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்றது. பாகிஸ்தானில் நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இந்தியா, இலங்கைக்கு மாற்றப்பட்டன. 

உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டதால், தங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடுதர வேண்டும் என் று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெ ட் வாரியம் கோரிக்கை விடுத்தது. 

இது தொடர்பாக பல தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு ஏற்பட்டது. அதன் படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. ரூ. 72 கோடி நஷ்ட ஈடாக வழங்குகிறது. 

ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு முதல் கட்டமாக ஐ.சி.சி. ரூ. 46 கோடி வழங்கி விட்டது. மீதமுள்ள தொகையை ஐ.சி.சி. விரைவில் வழங்கு ம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்