முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும்: வாசிம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஆக.5 - இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடியதற்காக தோனியை குறை கூற முடியாது. இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டெழும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தோனி இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். உலகில் பல்வேறு பகுதிகளில் அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். தோனி அவருடைய விக்கெட் கீப்பர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு போட்டிகளில் தோற்றதற்காக அவர் சோடை போய் விட்டார் என்று கூற முடியாது. இந்த தோல்வியை அவர் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தது, தவறு என்று முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அக்ரம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். முதல் நாளில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஏராளமான புற்கள் வளர்ந்திருந்தன. அதனால் அவர் பீல்டிஙஅகை தேர்வு செய்தது சரியான முடிவே என்று நம்புகிறேன். பல்வேறு தரப்பினர் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு பவுலரான என்னை பொறுத்தவரை முதலில் பந்து வீசியது சரியான முடிவே என்றார். 

சேவாக்கின் வருகை குறித்து பேசிய அக்ரம், அவரின் வருகையால் இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். அவரது வருகை இந்திய பேட்டிங்குக்கு பலம் சேர்க்கும். அவர் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அதனால் இந்தியா தோல்வியில் இருந்து மீண்டெழும். சேவாக், கம்பீர் ஆகியோர் இந்திய அணியின் வியக்கத்தக்க தொடக்க ஜோடி. எனவே அவர்கள் இந்திய அணி மீண்டு வர உதவுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். 

ஜாகீர்கான் குறித்து பேசிய அவர், ஜாகீர் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் நார்த்தம்ப்டன்ஸயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என்று கருதுகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்