முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நார்த்தாம்டன்ஷயர் அணிகள் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

நார்த்தாம்டன்ஷயர், ஆக. 5 - இந்தியா மற்றும் நார்த்தாம்டன்ஷயர் அணிகளுக்கு இடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் இன்று துவங்குகிறது. இதில் பலப்பரிட்சை நடத் த இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலை மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் இந்தியா மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. 

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய 196 ரன் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது. பின்பு நாட்டிங்ஹாமில் நடந்த 2 -வது டெஸ்டில் 319 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

இதனால் தொடரை சமன்செய்ய எஞ்சிய 2 டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. தவிர, நம்பர் - 1 இடத்தை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. 

மோசமான தோல்விக்கு பிறகு, இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத் தில் விளையாடுகிறது. நார்த்தாம்டன்ஷயர் அணியுடன் இந்தியா மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் நார்த்தாம்டன்ஷயர் நகரில் இன்று துவங்குகிறது. 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக சோமர்செட் அணியுடன், இந்தியா மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது நினைவு கூறத்தக்கது. 

முதல் 2 டெஸ்டில் காயம் காரணமாக விளையாடாத அதிரடி வீரர் சே வாக் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அவரது வருகைக்கு பிறகாவது இந்திய அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர் பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. 

பேட்டிங்கில் தொடர்ந்து திணறிவரும் கேப்டன் தோனி தனது திறமை யை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 3 -வது டெஸ் ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த பயிற்சி ஆட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்