முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு பத்திரிக்கையைளர்கள் நன்றி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக்.5 - பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்தியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பத்திரிக்கையாளர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழக சட்டபேரவையில் நேற்று 2011-2012 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில அறிவிப்புக்களை வெளியிட்டார். 

அதன் விபரம் வருமாறு:

பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 39 இலட்சம் ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை பத்திரிக்கையாளர் சங்கக் கட்டடத்தை அண்மையில் திறந்து வைத்தார்கள்.  இந்த வளாகத்தில் ஊடகங்களுக்கென ஒரு மையத்தை 50 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஏற்படுத்தும்.  தலைமைச் செயலக செய்திக் குறிப்புப் பிரிவிலிருந்து காணொளி ​ அச்சு ஊடகங்களுக்கு இணையதளத்தின் மூலமாக ஒளிப் பதிவுகளை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்படும்.   இவ்வாறு அறிவித்தார்.

ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள் சட்டபேரவை முடிந்து வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அதனை முதல்வர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்