முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர் ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000-மாக உயர்த்தி அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.2842 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இலவச தங்கும் விடுதிகளை கட்டிதரவும் அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் 2011-12 நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, உரையாற்றினார். அப்போது அவர் சமூக நலன்குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது அவர் கூறியதாவது:-

பணவீக்கம் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே, இப்பிரிவினரை சமூகப் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவருவது அவசியமாகும்.  இப்பின்னணியில் இந்த அரசு பதவியேற்றதும் உடனடியாக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாதம் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறது. 

இத்திட்டத்தின் மூலம் 23.95 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.   மத்திய அரசு அண்மையில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை 65  லிருந்து 60 ஆக குறைத்து உள்ளதால் கூடுதலாக 5.36 இலட்சம் பயனாளிகள்  ஓய்வூதியம் பெறுவர்.    இந்த அரசு 2011​2012 ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்களுக்காக 2,842 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ஆதரவற்ற முதியோரும், குழந்தைகளும் தங்குவதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒரு சிறப்பு இல்லத்தை ஏற்படுத்தித் தர இந்த அரசு உறுதி nullண்டுள்ளது. தற்போது 90 வட்டாரங்களில் அரசால் 27 குழந்தைகள் நல மையங்களும், அரசு சாரா நிறுவனங்களால் 173 குழந்தைகள் நல மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  இதேபோன்று 62 வட்டாரங்களில் 93 முதியோர் இல்லங்கள் ​ பகல் நேர பராமரிப்பு இல்லங்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இயங்கி வருகின்றன.  இந்த அரசு, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோருக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கும்.  மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.  இத்திட்டம்,  சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக கடமையின் ஒரு பகுதியாக, அவர்களது உதவியுடன் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்