முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டக்ளசை கைது செய்யாதது ஏன் ? உயர்நீதி மன்றம் கேள்வி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.6 - தேடப்படும் குற்றவாளியான இலங்கையைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது அவரை ஏன் கைது செய்யவில்லை என்று மத்திய அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. சென்னையில் 1986- ம் ஆண்டு டக்ளஸ் தங்கியிருந்தபோது சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதில் கைதான டக்ளஸ் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் 88 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திய டக்ளஸ், ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு அதன்பேரில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். 1989 ல் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை கோர்ட்டு அறிவித்தது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு டெல்லி வந்த ராஜபக்ஷேவுடன் டக்ளசும் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அரசு ராஜ வரவேற்பு அளித்தது. பிரதமர் மன்மோகன்சிங் டக்ளசை வரவேற்று கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேடப்படும் குற்றவாளியுடன் எவ்வாறு பிரதமர் இப்படி விருந்து உபசாரம் செய்யலாம் என்று மீடியாக்கள் கேள்வி கேட்டன. 

இந்த நிலையில் டக்ளஸ் குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் டெல்லிக்கு வந்த போது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்