முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கார்ல்ஸ்பேட், ஆக. 6 - அமெரிக்காவின் கார்ல்ஸ்பேட் நகரில் நடைபெற்று வரும் மெர்க்குரி இன்சூரன்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்லினா ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. 

மகளிர் இரட்டையர் பிரிவு 2 வது ஆட்டத்தில் போலினா, சீனாவின் ஜி ஜெங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டில் 2 - 5 என்ற கணக்கில் சானியா, வெஸ்லினா பின்தங்கியிருந்த நிலையில் எலினாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக சானியா, வெஸ்லினா ஜோடி அறிவித்தது. இதையடுத்து எலினா, ஜிஜெங் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மகளிர் ஒற்றையர் ஆட்டத்திலும் சானியா மிர்சா தோல்வி கண்டு வெளியேறினார். இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானி 6 - 2, 6-3 என்ற கணக்கில் சானியாவை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்