முக்கிய செய்திகள்

ராஜேந்தர் - சிலம்பரசன் மீது கொலை மிரட்டல் புகார்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

சென்னை,ஆக.6 - நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் சிலம்பரசன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சியை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ராமமூர்த்தி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 1999 ம் ஆண்டில் டி. ராஜேந்தருக்கு ரூ. 59 லட்சம் கடன் கொடுத்தேன். இதில் அவர் எனக்கு ரூ. 31 லட்சத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் விசாரணை அங்கு நடைபெற்று வருகிறது. சமாதானம் பேசுவதற்காக அண்மையில் டி. ராஜேந்தர் என்னை அழைத்தார். நானும் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த டி. ராஜேந்தர், அவரது மகன் சிலம்பரசன் இருவரும் பணத்தை தர முடியாது எனக் கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் சிலம்பரசன் என்னை தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளினார். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: