முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் அரசு புதிய பொறியியல் கல்லூரி

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.6 - தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார். 2011 - 12 நிதியாண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்துக்காக திருத்தப்பட்ட வரவு, செலவு திட்டத்தின் கீழ் ரூ. 912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக 2011 -12 நிதியாண்டில் ரூ. 280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்