முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகளூர் காகித ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.6 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டம், காகிதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் தொடர்ந்து 5 மணி நேரம்  தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலை செயல்பாடு குறித்து பல்வேறு பிரிவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது போக்குவரத்துத்துறை  அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர். 

ஆய்வின்போது ஆலை கழிவு நீரில் ரசாயன உரங்கள் கலந்து சுத்திகரிக்கப்பட்டு விவசாய பண்பாட்டிற்காக திறந்து விடப்படும் நீரில் முறையாக உரங்கள் கலக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இக்குறைப்பாட்டிற்கு காரணமான சம்பந்தப்பட்ட  2 பிரிவு அலுவலர்கள் மீது ஜெயலலிதா ஆணைக்கிணங்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரசாயன உர கலவை  இயந்திரம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜெயலலிதா ஆணைக்கிணங்க  ரசாயன உர கலவை இயந்திர முறையை உடனடியாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஆலை தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர் நலன் குறித்து வழங்கிய மனுக்களை ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார். தொழிலாளர் நலன் கருதி ஜெயலலிதாவின் அறிவுரையின்படி தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சுவாச கவசம் தேவையான அளவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்