முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயன் ஆசிரியர் மீது தாக்குதல்: வை.கோ கண்டனம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 5 - உதயன் பத்திரிக்கை ஆசிரியர்  ஞானசுந்தரம் குகநாதன் மீது சிங்கள அரசுகொலைவெறிதாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்கு உரியது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ.  நம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வை.கோ.விடுத்துள்ள கண்ட அறிக்கை: 

பல ஆண்டுகளாகஈழத்தமிழர் நலனுக்காவும், ஜனநாயக உரிமைக்காகவும் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் கருத்துக்களை வெளிட்டு வரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன், பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களோடு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆயுதங்களைக் கொண்டு தாக்கி உள்ளனர். சிகிச்சையில் அவர் உயிர்பிழைத்து வந்தாலும் எந்தநேரமும் அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். ராஜபக்ஷேயின் காட்டு ஆட்சியில் உள்நாட்டு பத்திரிக்கைகளுக்கும் சுதந்திரம் இல்லை. வெளிநாட்டு பத்திரிக்கைகளை அனுமதிப்பதே இல்லை எனவே உலகெங்கும் பத்திரிகை சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காக்க விரும்புவோர்  அனைவரும் சிங்கள அரசின் அராஜகத்துக்கும்,சிங்கள இனவாதக் குண்டர்களின் வன்முறைக்கும் எதிராக பலத்த கண்டன் எழுப்பவேண்டும் என்று வை.கே. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் கண்டனம்:​

விடுதலைப்புலிகளை ஒழித்து விட்டோம் என்றும், தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகிறோம் என்றும் கூறி வருகிற சிங்கள ஆட்சியாளர்கள் இன்னும் எத்தகைய இனவெறி ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதற்கு உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலே சாட்சியமாக விளங்குகிறது. ஏற்கனவே இதுபோன்று பல தமிழ் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.   தற்போது குகநாதனை குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கும் செயலானது தமிழீழ மண்ணில் நடைபெற்று வரும் சிங்கள இனவெறியர்களின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் தடுக்கும் முயற்சியும், அச்சுறுத்தலுமேயாகும். இந்தப் போக்கை அமெரிக்க ஐக்கிய அரசும் கண்டித்துள்ளது. வழக்கம் போல இந்தியா அமைதி காத்து வருகிறது. ஈழத்தில் நடைபெற்று வரும் கொடுமைகள் தொடர்பாக விவாதிப் பதற்கும் இந்திய நாடாளு மன்றத்தில் வாய்ப்பளிக்காமல் இந்திய ஆட்சியாளர்கள் நழுவி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம்:​ 

தமிழர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளையை முழுவதுமாக நெரிக்கப்பட்டுள்ளது. இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படுதோல்வி பொறுக்க முடியாமல் ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது. இதுவரை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் ராஜபக்சேயின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வெறித்தாக்குதலுக்கு இரையாகி உள்ளனர். அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன. ஆனால் சிங்கள இனவெறி அரசோ உலகின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக விசாரணை என்ற பெயரில் சிலரைக் கைது செய்து நாடகமாடியிருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தும் அடங்காத ராஜபக்சேயின் இனப் பாசிசம் இன்னும் தனது தமிழர் மீதான வேட்டையைத் தொடருகிறது. இதற்கு பத்திரிகையாளர் குகநாதன் இரையாகியிருக்கிறார். நாமும் தொடர்ந்து சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடருவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago