முக்கிய செய்திகள்

சன் பிக்சர்ஸ் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

உடுமலை, ஆக. 6 - சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனாவுக்கு வரும் 19 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உடுமலை ஜே.எம். 1 கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான காகித ஆலை, கருமத்தம்பட்டியில் உள்ளது. திருவல்லிக் கேணி தி.மு.க. எம். எல்.ஏ. அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா, ஐயப்பன், உட்ப ட 8 பேர் கொண்ட கும்பல் மிரட்டி காதி ஆலையை அபகரித்தது. 

இதையடுத்து, சக்சேனா, ஐயப்பன், ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காகித ஆலை யை அபகரிக்க முயன்ற வழக்கில் ஆஜர்படுத்த, உடுமலை ஜே.எம். 1 கோர்ட்டுக்கு சக்சேனா மற்றும் ஐயப்பன் இருவரும் சென்னை புழல் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்டனர். 

இது குறித்து விசாரித்த மாஜிஸ்திரேட்டு வரும் 19 -ம் தேதி வரை காவ ல் நீட்டிக்கவும், ஜாமீன் வாதம் 9 -ம் தேதி மதியம் தொடரப்படும்  என உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று மீண்டு ம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: