முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டன்லப் ஆலை பிரச்சினை: முதல்வர் தலையிட வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.6 - நிர்வாகத்தின் குடும்ப பிரச்சினைகளால் கடந்த 15 ஆண்டுகளாக, முடக்கப்பட்டுள்ள அம்பத்தூர் ``டன்லப்'' டயர் தொழிற்சாலை பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, தீர்வுகாண ஏற்பாடு செய்ய வேண்டும் என, சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் ​ அம்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள டன்லப் தொழிற்சாலை கடந்த ஐம்பதாண்டுகளாக அப்பகுதியில் இயங்கி வரும் ஆலை என்பது தாங்கள் அறிந்ததே! இந்த ஆலையில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் தொழிலாளர் நலனுக்கும், தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாக இல்லை.

1959 பிப்ரவரியில் துவங்கப்பட்ட டன்லப் ஆலை டிரக், லாரி, பஸ், சைக்கிள் டயர்களை உற்பத்தி செய்து வந்தது. டன்லப் ஆலை செயல்பட அப்போதைய தமிழக அரசு அரசாணை எண் 2729/18.9.1959 மூலம் 26.03 ஏக்கர் நிலம் வழங்கியது. இது தவிர அரசாணை எண் 2505/1961 ​ தேதி 15.6.61 மூலம் அம்பத்தூரில் 65.14 ஏக்கர் நிலமும், அம்பத்தூர் ​ அத்திப்பட்டு கிராமத்தில் அரசாணை எண் 2505/15.6.61 மூலம் 52.28 ஏக்கர் நிலமும், சைதை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் 1964​ல் ஆவணம் 3522/64 மூலம் 6.24 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இது தவிர ஆலை நிர்வாகம் தனியாரிடமிருந்து 1.01 ஏக்கர் நிலத்தை வாங்கியது. மாநில அரசு மூலம் கொடுக்கப்பட்ட நிலங்கள் அனைத்துமே தொழில் பயன்பாடு, ஆலை விரிவாக்கம் இவற்றுக்காக வழங்கப்பட்டவையாகும்.

கொல்கத்தாவைத் தலைமையகமாக கொண்டு இயங்கிடும் இந்த ஆலை தற்போது பவான் குமார் ரூயா தலைமையிலான ரூயா க்ரூப் நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு முன்பு 2005ம் ஆண்டு வரை மனு சாப்ரியா என்பவர் நிர்வாகத்தில் ஷா வாலஸ்  குழுமத்தில் இருந்தது.

ஷா வாலஸ் குழுமமோ, ரூயா குழுமமோ எடுத்த நிர்வாக ரீதியான தவறான முடிவுகள், நிர்வாகத்தினரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் என கடந்த 15 ஆண்டு காலமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டது தொழிலாளர்களே ஆவர். வேலை நிறுத்தங்களோ அல்லது தொழிலாளர் தரப்பு எவ்வித ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளோ இல்லாமல் வெறுமனே நிர்வாகத் தரப்பில் தவறான அணுகுமுறைகளில் இந்த ஆலை தற்போது இடரில் பெரும் இக்கட்டில் தள்ளப்பட்டிருக்கிறது.

2500 தொழிலாளர்கள் பணி புரிந்த இந்த ஆலையில் தற்போது 530 தொழிலாளர்க்கும் குறைவாகவே உள்ளனர். இவர்களில் சுமார் இருநூறு பேருக்கு மட்டுமே வேலையளிக்கப்படுகிறது. உற்பத்தி உயர்வுக்கான சூழல், ஆர்டர்கள் இருந்தும் அவை புறந்தள்ளப்படுகின்றன. தொடர்ந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான கிராஜிவிட்டி, பி.எப். போன்றவை கூட தரப்படுவதில்லை. 190 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இங்ஙனம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈ.எஸ்.ஐ.,  பி.எஃப். போன்றவை நிர்வாகத்தால் சமீப ஆண்டுகளாக கட்டப்படுவதும் இல்லை. தொழிலாளர்கள் nullதிமன்றப் படியேறினாலும் பலன் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ​

டன்லப் ஆலைக்கு தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிலங்களை சூறையாடிடவும் முயற்சி நடக்கிறது. பி.ஐ.எஃப்.ஆர். எனப்படும் நலிவடைந்த ஆலைக்கான மத்திய அரசு நிறுவனத்தில் அனுமதி பெற்று (பி.ஐ.எஃப்.ஆர். - 14/98​21/03/2001) 60 ஏக்கர் நிலம் 2004 ஜூனில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

இது தவிர அம்பத்தூர் அத்திப்பட்டிலிலுள்ள 58 ஏக்கர் நிலம், 2007​ம் ஆண்டு டிசம்பரில் டன்லப் ப்ராப்பர்டீஸ் என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அம்.டாக். 13229/07/12.12.07) மேற்சொன்ன நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானதும், மாநில அரசு முறைப்படி அனுமதி தராததுமான நடவடிக்கைகளாகும். வேகன்ட் லேண்ட் பிரிவு 21 (1) (ஏ) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட மேற்சொன்ன நிலங்கள் அரசாணை எண்: 694/20.5.86 மூலம் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க​

அத்திப்பட்டு நிலங்களில் சுமார் 20 ஏக்கர் நிலம் எம். தட்சிணாமூர்த்தி, கே. குப்புராஜ் மற்றும் பலர் போலி பத்திரங்கள் மூலம் டன்லப் / அரசு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். இது குறித்து சென்னை உயர்nullதிமன்றம் 21.01.2009 அன்று தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளது. அதில், அரசாணை 694/20.5.86 மூலம் மாநில அரசே இந்நிலங்களை கைப்பற்ற வேண்டுமெனவும் தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை, வருவாய்த்துறை மூன்றும் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது. எனவே,

இத்தகையதொரு சூழலில் ​

பலநூறுபேர் பலன் பெறும் காமதேனு போல உள்ள டன்லப் ஆலை பிரச்சனையில் தங்களது தலையீடு உடனடி அவசியமாகிறது.

1.ஆலையை முழுமையாக இயக்கி இன்னமும் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது.

2.ஓய்வு பெற்றோருக்கு சேர வேண்டிய சட்டப்படியான பணிக்கொடை, பி.எப்., நிலுவைகள் உடனடியாக கிடைக்க வழி செய்வது.

3.டன்லப் ஆலைக்கு சொந்தமான நிலங்களை அரசே கைப்பற்றி, நிலமோசடி செய்தோர் மீது கறாரான நடவடிக்கை எடுப்பது.

என மூன்று அம்சங்களிலும் தாங்கள் தலையீடு செய்து, பாரம்பரியமிக்க டன்லப் ஆலை தொடர்ந்து இயங்கிட  உரிய நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்