முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 5​- பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. வங்கிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். வங்கி ஒழுங்குமுறை சட்ட பிரிவு 12(2).ஐ nullக்க கூடாது. காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இந்தியா முழுவதும் பாங்கிகளில் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாடு முழுவதும் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன.தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்து 500 வங்கி கிளைகள் உள்ளன. ஊழியர்கள், அதிகாரிகள், கிளை மேலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. உதவி பொது மேலாளர் அந்தஸ்தில் அதிகாரிகள் இருக்கும் பெரிய கிளைகள் மட்டும் திறந்து இருந்தன. ஆனால் ஊழியர்கள் வராததால் வெறிச்சோடி கிடந்தன. வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் பண பட்டுவாடா, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் முடங்கியது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங்கள் பாதித்தது. அவசர தேவைக்கு லட்சக்கணக்கில் பணம் எடுக்கும் வாடிக்கையார்கள் திண்டாடினார்கள். ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப். சி. போன்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் வங்கி ஊழியர்கள் மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 இந்த ஆர்பாட்டத்திற்கு  வங்கி ஊழியர் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அவர்  செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற 10​ந் தேதி நடைபெற உள்ள வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீவிர போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் 

என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்