முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.6 - சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் திடக் கழிவுகளை அகற்றி மாநகரை தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளை கண்டறிய நேற்று 5.8.11) தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச் சூழலின் சமநிலையை நிலைநிறுத்தி நாம் சார்ந்திருக்கும் உயிர் சூழல் அமைப்புகளை முறையாக பாதுகாப்பதன் அவசியத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும் ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள 2011-12 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு- செலவு மதிப்பீட்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக் கழிவுகளை அகற்றி சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளை கண்டறிவதற்காக சென்னா மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (5.8.2011) ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்