முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 - 14ம் தேதிகளில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஆக.6 -  அ.தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் இம்மாதம் 13.8.2011 ​ மற்றும் 14.8.2011 தேதிகளில் தமிழகதத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறஉள்ளன என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ள 2011​​2012 ஆம் ஆண்டிற்க பட்ஜெட் அறிக்கையில், மக்கள் நலனை முன் வைத்து அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், அ.தி.மு.க.  அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் இம்மாதம் 13.8.2011 மற்றும் 14.8.2011 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளன. இந்த 

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது . அ.தி.மு.க.  சட்டமன்ற உறுப்பினர்கள், தத்தமது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களும், மாவட்டக் அ.தி.மு.க.  நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, அ.தி.மு.க. நிர்வாகிகளுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம்,  ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago