முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.7 - மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தலைக்காய பிரிவு பகுதிக்கு 4 பேர் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் இரவு வந்தனர். அந்த 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் போதை வாலிபர்கள்  போதைவாலிபர்கள் 4 பேரிடமும் உணவு சீட்டு வாங்கி வந்தால் தான் உங்களுக்கு சிகிச்சை அளிப்போம் என்று கூறினர். 

இதையடுத்து 4 பேரும் 99-வது வார்டு பகுதி அருகே சென்று அங்கு உள்ள டாக்டர்களிடம் உணவு சீட்டு வாங்கவேண்டும் என்று கேட்டனர். இதில் டாக்டர்களுக்கும் போதை வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 4 பேரும் சேர்ந்து டாக்டர்களை ஏன் எங்களை இப்படி அலைகழிக்கிறீர்கள் என்று  தகாத வார்த்தைகளால் பேசினாராம்.

இது குறித்து இரவு பணியில் இருந்த டாக்டர்கள் மருத்துவமனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 போலீசாரிடம் போதை வாலிபர்கள் எங்களிடம் தகராறு செய்கிறார்கள் என்று புகார் கூறினார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் டாக்டர்களை தாக்கியும் தரக்குறைவாக பேசிய 4 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்யவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை முதல் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள 300 டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக வேலைபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்