முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை: லாரி உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

நாமக்கல்,ஆக.7 - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் பலமுறை உயர்த்தப்பட்டு விட்டது. 

இந்த நிலையில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளையும் எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறுகையில், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் டீசல் விலை அடிக்கடி உயர வாய்ப்புள்ளது. அவ்வாறு டீசல் விலை அடிக்கடி உயரும் பட்சத்தில் லாரிகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்படும். அத்துடன் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும். எனவே மத்திய அரசு டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago