முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஸ்வர்யா டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் ``மூன்று''

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் `3 '  என்ற புதிய படத்தில் நடிகிறார். இதுகுறித்து நடிகர் தனுஷின் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, `3' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். 

இதுகுறித்து  தனுஷ், ஐஸ்வர்யா இருவரிடமும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இருவரும் அளித்த பதில்களும் வருமாறு:​

கேள்வி:​ உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு டைரக்டராக விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா?

பதில்:​ விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற டைரக்டர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படியே இந்த படத்திலும் வேலை செய்கிறேன்.

கேள்வி (ஐஸ்வர்யாவிடம்):​ உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா?

பதில்:​ படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் டைரக்டர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்.

கேள்வி:​ இந்த படத்தின் கதை தனுசுக்காக எழுதப்பட்டதா?

பதில்:​ எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுசை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.

கேள்வி:​ இந்த படத்தில் தனுசுடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:​ இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி கேட்கவில்லை.

கேள்வி:​ டைரக்டு செய்வது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா?

கேள்வி:​ டைரக்டு செய்வது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி:​ டைரக்ஷனில், உங்களுக்கு குரு யார்?

பதில்:​ செல்வராகவன்தான் என் குரு.

கேள்வி (தனுசிடம்):​ சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்?

பதில்:​ வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது.''

இவ்வாறு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பதில் அளித்தார்.

பேட்டியின்போது டைரக்டர் கஸ்தூரிராஜா, நடிகை அமலாபால், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் அனிரூத், எடிட்டர் கோலா பாஸ்கர், பி.ஆர்.ஓ ரியாஸ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!