முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்: பணிகள் குறித்து ஆய்வு

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் ஆக.7 - நாமக்கல் மாவட்டம் மோகனூர்  கரூர் மாவட்டம் வாங்கல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.36.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணியினை  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, வருவாய்த் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இப்பாலம் 24.60 மீட்டர் அளவுள்ள 56 கண்களை கொண்டது. இப்பாலத்தின் மொத்த nullநிளம் 2.9 கி.மீ. ஆகும். மோகனூர் பகுதியில் 0.9 கி.மீ. nullநிளத்திற்கு அணுகு சாலையும், வாங்கல் பகுதியில் 0.60 கி.மீ. nullநிளத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்படவுள்ளது. இப்பாலம் கட்டுவதால் மோகனூர். காட்டுப்புத்தூர், ஒருவந்தூர், வலையப்பட்டி, தோப்nullnullர், நெய்காரன்பட்டி, பாலப்பட்டி, வாங்கல், நெரூர், தளவாய்பாளையம், குப்புச்சிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ஆகிய கிராமங்கள் பயனடையும். ஏற்கனவே மோகனூரிலிருந்து வாங்கல் செல்ல பயண தூரம் 37 கி.மீ. ஆக இருந்தது. பாலம் கட்டி முடிகப்பட்டால் பயண தூரம் 3 கி.மீ. ஆக குறைகிறது. பாலப் பணிகளை துரிதமாக முடித்திட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  அறிவுறுத்தினார். 

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை  ஈரோடு மாவட்டம் லகாபுரம் இடையே காவிரி ஆற்றின் குறுகே ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணியினை  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்   எடப்பாடி கே.பழனிசாமி,  வருவாய்த் துறை அமைச்சர் திரு பி. தங்கமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் நுழையாமல் வெளிப்புறமாக வெளிவட்டச் சுற்றுச் சாலையில் செல்லும் வகையில் இந்த பாலம் பயன்படும். இப்பாலத்தின் nullநிளக் 319.80 மீட்டர் ஆகும். பாலத்தின் அகலம் 12 மீட்டர். இருபுறமும 2.5 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதையுடன் இப்பாலம் அமைக்கப்படவுள்ளது. 

ஆய்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன்  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினகே.பி.பி. பாஸ்கர், கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம்) தங்கமுத்து, நாமக்கல் கோட்டப் பொறியாளர்            பாலசுப்பிரமணியன், ஈரோடு கோட்டப் பொறியாளர் தங்கவேல், உதவி கோட்டப்பொறியாளர்கள்  நாகராஜ்,  சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்