முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெகா லோக் அதாலத்: ஒரே நாளில் 1,150 வழக்குகள்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள போக்குவரத்துக்கழகம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் வழக்குகளுக்கான மெகா லோக் அதாலத் நேற்று நடந்தது. 1,150 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓய்வு பெற்ற 10 நீதிபதிகள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொடக்க நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். நீதிபதி சிவகுமார் வரவேற்று பேசினார். 

நீதிபதி பானுமதி பேசுகையில், கோர்ட்டுகளில் வழக்குகள் தேக்கம் அதிகமாக இருப்பதால் அவற்றை லோக் அதாலத் மூலம் முடிவுக்கு கொண்டு வருகிறோம். லோக் அதாலத் தீர்ப்பை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் இரு தரப்பினரிடமும் பேசி சுமூகமான முறையில் வழக்குகளை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். 

நீதிபதி டி.முருகேசன் பேசுகையில், தேசிய அளவில் தமிழ்நாடு ஜூ டிசியல் அகாடமியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழுவும் முன்மாதிரியாக விளங்குகிறது என்று இந்திய சட்டக்கமிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத பிரச்சினை தொடர்பான வழக்குகள் ஏராளமாக உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க 3 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் சென்னையில் உள்ளன. இதில் ஒரு நீதிபதிதான் இருக்கிறார். 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. தீர்ப்பாயங்களில் அடிப்படை வசதிகளும் குறைவாக உள்ளன. எனவே அந்த வழக்குகளையும் லோக் அதாலத் மூலம் தீர்க்க வேண்டும் என்றார். 

நீதிபதி எலிப்பி தர்மராவ் பேசுகையில், லோக் அதாலத்தில் தரப்படும் தீர்ப்பு சிவில் கோர்ட்களில் தரப்படும் தீர்ப்புக்கு சமமானவை. இந்த தீர்ப்பே இறுதியானது. சென்னை ஐகோர்ட்டில் 2010-லிருந்து இதுவரை 7,967 லோக் அதாலத்துக்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 120 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 84 ஆயிரத்து 214 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம்  ரூ.511 கோடி பைசல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்