முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் அபகரிப்பு: தி.மு.க. கவுன்சிலர் கூட்டாளியுடன் கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - சென்னை வேளச்சேரியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து வேலி போட்டதாக தி.மு.. கவுன்சிலரையும், அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.  இதுபற்றிய விபரம் வருமாறு:-​

தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் பெருங்குடி ரவிச்சந்திரன்(49). இவர் மீது நிலமோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டு போலீசார் கைது செய்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். மயிலாப்பூரை சேர்ந்தவர் கலா(40). இவருக்கு சொந்தமான இடம் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்குமாம். இவரது நிலத்தை தி.மு.க. கவுன்சிலர் பெருங்குடி ரவிச்சந்திரன் தனது கூட்டாளி மக்புல் ஜான்(49) என்பவருடன் சேர்ந்து ஆக்கிரமித்து கொண்டாராம். ஆக்கிரமித்த நிலத்தை சுற்றி பெருங்குடி ரவிச்சந்திரன் தடுப்பு சுவர் எழுப்பியுள்ளார்.  இதுபற்றி நிலத்துக்கு சொந்தக்காரரான கலா 6 மாதங்களுக்கு முன்பு  காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகார் கிணற்றில் போட்ட கல்லாக இருந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் நிலமோசடி ஆசாமிகளுக்கு எதிராக தனிப்பிரிவு அமைத்து நிலமோசடி அபகரிப்பு புகார்களுக்கு எதிரான கடுமைமையான நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த கலா, மீண்டும் பெருங்குடி ரவிச்சந்திரன் மீது புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்து விசாரித்த போலீசார் கலாவின் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தி.மு.க. கவுன்சிலர் பெருங்குடி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளி மக்புல்ஜான் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago