முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் பிச்சர்சஸ் மீது திரையரங்கு உரிமையாளர்கள் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - சன் பிச்சர்சஸ் தயாரித்த எந்திரன் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.7 கோடி திருப்பி தராதது குறித்து 40 பேர் புகார் அளித்துள்ளனர்.  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் ஆர்.எம்.அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ந்தேதியன்று ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். சன் பிச்சர்சஸ் தயாரித்த எந்திரன் படத்திற்காக திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.7 கோடி வரை திருப்பு தரவில்லை. இதுகுறித்து எங்களிடம் 40 பேர் புகார் செய்துள்ளனர். இந்த புகார் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்க உள்ளோம். தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைக்கவும் உள்ளோம். முன்பு திரையரங்கு லைசன்ஸ் 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கலாம்.  இதனை கடந்த தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டிலிருந்து ஒரு ஆண்டாக மாற்றிவிட்டார்கள். இதனால்  லைசன்ஸ் புதுப்பிக்கும் செலவு ஐந்து மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது. நுழைவு கட்டணத்தை சீரமைக்கவும் முடிவு எடுக்கப்படும். 

நடிகை, நடிகர்கள் தங்கள் சம்பளத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரின் முத்தரப்பு கூட்டம் நடைபெறும். அதில் நடிகர்களின் சம்பளத்தை அவர்கள் நடித்த படம் வசூல் ஆவதத்திற்கு நிர்யிணக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களும், திரையரங்கும் உரிமையாளர்களும் நஷ்டம் அடையமாட்டார்கள்.

சிலர் கூட்டமைப்பு என்ற பெயரில் திரையரங்கு உரிமையாளர்களின் முயற்சியும், வெற்றியும் தடை செய்கிறார்கள். மல்டி ப்ளஸ் தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியும், சாதாரண தியேட்டர்களின் கட்டணத்தை குறைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்