முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை,ஆக. 7 - இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 - 20 போட்டிக் காக 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது. இந்திய அணி வீரர்கள் தேர்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். கூட்டத்திற்குப் பின்னர் வீரர்கள் பற்றிய விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் அறிவித்தார். 

16 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் தமிழக சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெற்று இருக்கிறார். முன்னணி சுழற் பந்து வீச்சாள ரான ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து தொடரில் அவர் தொடர்ந்து மோசமாக பந்து வீசியதே இதற்கு காரணமாகும். 

இந்திய அணியின் மூத்த வீரரான ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டிக் கான அணியில் இடம் பெற்று இருக்கிறார். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடி வருவதைத் தொடர்ந்து அவ ருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரன் எடு க்க திணறி வருகின்றனர். ஆனால் ராகுல் டிராவிட் ஒருவர் மட்டும் நிலைத்து ஆடி ரன்னை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஹர்பஜன் சிங்கிற்கு தற்போது வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. யுவ ராஜ் சிங்கிற்கு இடது ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிற து. எனவே இருவரும் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் நீக்கப்பட்டனர். 

கர்நாடக வேகப் பந்து வீச்சாளரான வினய் குமார் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். 

வேகப் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் மற்றும் இடது கை சுழற் பந்து வீச் சாளரான பிரக்ஞ்யான் ஓஜா ஆகியோர் அணியில் இடம் பெறவில் லை. அமித் மிஸ்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியில் இடம் பெ ற்று உள்ளனர். 

ஒரு நாள் போட்டியில் அடிக்கடி நழுவி வரும் நட்சத்திர வீரரான டெ ண்டுல்கர் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம் பெற்று இருக்கிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 - க் கு 20 போட்டி நடக்கிறது. இந்தப் போட்டி மான்செஸ்டர் நகரில் வரு ம் 31 -ம் தேதி நடக்க உள்ளது. 

இதனைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டிகள் நடக்க இருக்கிறது. முத ல் போட்டி செஸ்டர் லெ ஸ்ட்ரீட்டில் செப்டம்பர் மாதம் 3 -ம் தேதி நடக்கிறது. 2 -வது போட்டி செளத்தாம்டன் நகரில் 6 -ம் தேதி நடக் கிறது. 

பின்னர் லண்டனில் 3 -வது போட்டி 9 -ம் தேதியும், 4 -வது போட்டி 11-ம் தேதியும் நடக்கிறது. கடைசி மற்றும் 5 -வது போட்டி கார்டிப் நகரி ல் 16 -ம் தேதி நடக்கிறது. 

இந்திய அணி விபரம் வருமாறு - மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெளதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, ராகுல் டிராவிட், விராட்கோக்லி, ரோகித் சர்மா, ஜாஹிர் கான், அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், பார்த்திவ் படேல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்